இலங்கையில் கடந்த 2 நாட்களாக கொரோனா நோய்த் தொற்றாளிகள் எவரும் பதிவாகாத நிலையில் புதிதாக ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் புதிதாக கொரோனா நோய்த் தொற்றாளி ஒருவர் பதிவாகியுள்ளார்.
இதன்படி ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1951 ஆக உயர்வடைந்துள்ளது.
குறித்த நோயாளி மாலை தீவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 414 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன், 1526 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாத்திரம் 28 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, இது வரையில் 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments