Advertisement

Responsive Advertisement

இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள்..! சுகாதார அமைச்சு பகிரங்க அறிவிப்பு..



இலங்கையில் கடந்த 3 கிழமைகளில் சமூக மட்டத்தில் ஒரு நோயாளி கூட அடையாளம் காணப்படாத நிலையில் நாட்டில் கொவிட் -19 பூரணமாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறியிருக்கின்றார்.
மேலும் வைரஸ் தொற்றுக்குள்ளான 580க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை குணமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், தற்போதைய போக்கில் பொதுமக்கள் திருப்தி அடைய முடியும் என்று அமைச்சர் கூறினார். இதற்கிடையில்கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை கடற்படைக்கு சுகாதார அமைச்சு கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வெலிசர கடற்படை முகாமில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு
விசாரணை நடத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.விசாரணைகளை தொடர்ந்து கடற்படைக்கு கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments