Advertisement

Responsive Advertisement

களுவாஞ்சிக்குடியில் சமுர்த்தி பயனாளிகளுக்கான 2ம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு

(ரவிப்ரியா)
மண்முனை தென் எருவில் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வை 19ந் திகதி செவ்வாயன்று கோட்டைக்கல்லாறு கிராம சேவகர் காரியாலயத்தில் வைத்து பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினத்தினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

உதவி செயலாளர் திருமதி சத்தியகௌரி, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் க.உதயகுமார், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி ஜீவகுமார், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் சீ.ரவீந்திரன், கிராம சேவை உத்தியோகத்தர் ம.கேதீசன், வலய உதவியாளர் இரா.பிறேமராஜன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அனுராதா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எம்.கிறிஸ்ரி ஆகியோர் கொடுப்பனவை வழங்கி வைத்தனர். கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் புருஷோத்தமனும் ஒத்தழைப்பு நல்கினார்.

சமுர்த்தி பயனாளிகள் எவ்வித சிரமமமுமின்றி கொடுப்பனவை பெற்றுக்; கொள்வதற்கான ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட உத்தியோகத்தாகள் அனைவருமே தமிழ் பண்பு தவறாமல் பயனாளிகளை சிறப்பாக வழி நடாத்தியது பாராட்டுக்குரியது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட சமுர்த்தி பயனாளிகளுக்கும் தெளிவான விளக்கங்களை பொறுமையாக அளித்தததையும் செவிமடுக்கக் கூடியதாக இருந்தது.

இந்த உத்தியோகத்தர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காரியாலய முன் வீதியில் வைத்து, அவரின் வாகனத்திற்கு அருகே சென்று மிக பணிவுடன் துரிதமாக உரிய முறைப்படி அவருக்கான கொடுப்பனவை வழங்கி வழியனுப்பி வைத்தது கோடிட்ட காட்டியது.

பிரதேச செயலக அதிகாரிகளும், சமுர்த்தி அதிகாரிகளும் ஒரு குடும்பம்போல் இணைந்து செயற்பட்டதும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. மக்கள் சேவையில இது ஒரு மைல் கல் எனலாம்.












Post a Comment

0 Comments