Home » » கிளிநொச்சியில் மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்கும் சிறிதரனின் அடியாட்கள்

கிளிநொச்சியில் மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்கும் சிறிதரனின் அடியாட்கள்



கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் முழங்காலில் கிராமத்தில் உள்ள தேசிய பாடசாலையில் கற்பிக்கும் ஆரியர்கள் சிறிதரனுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் சிறிதரனின் அடியாட்கள் ஆகிய தன்ராஜ் மற்றும் குவேந்தி ஆகியோர்களில் அச்சுறத்தப்பட்டு தாக்கப்படுகின்றார்கள்.இதனால் பல ஆசிரியர்கள் குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்க விருப்பம் இல்லாமல் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்று செல்கின்றார்கள்.

அந்தவகையில் குறித்த பாடசாலையில் கல்விகற்பித்த ஆசிரியர் ஒருவர் மாவீரர் தினம் ஒன்றின் பொழுது சிறிதரன் தெரிவிக்க கருத்திற்கு எதிராக தனது முகநூலில் விமர்சனத்தை முன்வைத்திருந்தார.இதனால் கோபமடைந்த சிறிதரனின் அடியாள் ஆகிய தன்ராஜ் குறித்த ஆசிரியரை பாடசாலைக்கு வந்தால் படிப்பித்து விட்டு போகவேண்டும். பாடசாலை முடிந்தால் முகநூலில் சிறிதரன் ஐயாவிற்கு கருத்துகள் முகநூலில் தெரிவிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத தன்ராஜ்
இதனால் மனமுடைந்த ஆசிரியர் வல்வெட்டித்துறையில் உள்ள பிரபல பாடசாலைக்கு மாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.இவ் வாசிரியர் இடம் மாற்றம் பெற்றுச் செல்லும் பொழுது பல மாணவர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைததமை குறிப்பிட தக்கது.

இதேபோல் ஓர் மாணவன் தவறிழைத்த பொழுது அம்மாணவனுக்கு அடித்து விட்டார் ஆசிரியர்.இதனால் இவ்வாசிரியருக்கு எதிராக பொலிசில் அம்மாணவனின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது .இதனை கேள்வியுற்ற சிறிதரனின் அடியாளகிய குவேந்தி பாடசாலையில் உட்புகுந்த வேளை இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் சக ஆசிரியையுடன் பாட சம்மந்தமாக கதைத்து கொண்டிருந்த வேளை அவ்வாசிரியரை ஆசிரியை முன் வைத்து அடித்ததோடு தரக்குறைவான வார்த்தைகளாலும் திட்டியுள்ளான் குவேந்தி

குவேந்தியின் இச்செயற்பாடு  அப்பாடசாலை ஆசியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இருப்பினும் சிறிதரனின் தலையீடு காரணமாக இப்பிரச்சனை முடிவுறுத்தப்பட்டது.


தற்பொழுதும் அத் தேசிய பாடசாலையை சேர்ந்த பலருக்கு குறித்த இரு சிறிதரனின் அடியாட்களின் செயல்பாட்டால்  பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை பெறமுபியாது உள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர். 


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |