கொரோனா வைரஸ் குறும்பரவல் சீனாவின் ஆய்வகம் ஒன்றிலேயே ஆரம்பித்தது என்பதற்கு சான்றுகள் உள்ளன என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆதாரங்களை அவர் வெளிப்படுத்தப்படுத்தவில்லை.
எனினும் இதற்கான விசாரணைகளுக்கு சீன அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை என்றும் விசாரணைகளை அது தடுத்து வருவதாகவும் பொம்பியோ குற்றம் சுமத்தியுள்ளார்.
ஏற்கனவே இந்தக்குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதியும் சுமத்தியிருந்தார். இருப்பினும் அமெரிக்க புலனாய்வு சேவையினர் சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் குறும்பரவல் ஏற்பட்டதாக வெளியான தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments