Advertisement

Responsive Advertisement

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடத்துவது தொடர்பான தகவல்!!

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து, கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன.

இந்த நிலையிலேயே, மாணவர்களின் நலன்கருதி கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையை பிற்போடுவது குறித்து பரீட்சைகள் திணைக்களம், கல்வியமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் உயர்தரப்பரீட்சை மாணவர்களுக்கு 85 நாட்கள் பாடசாலை நடத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பரீட்சையை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments