Advertisement

Responsive Advertisement

பிரமாண்ட கிரிக்கெட் மைதானம்: பிரதமர் எடுத்த இறுதி முடிவு !

(ஜே.எப்.காமிலா பேகம்)
இலங்கையில் மிகவும் பிரம்மாண்டமாக நிர்மாணிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் அரங்க நிர்மாணப்பணிகள் கைவிடப்பட்டுள்ளது.

ஹோமாகம, தியகம பகுதியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்த, இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச விளையாட்டு மைதான வேலைத்திட்டமே இவ்வாறு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்பினர்கள் சிலரும் இன்று கலந்துகொண்ட கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம, தியகம பகுதியில் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த கிரிக்கெட் அரங்கிற்கான நிதியை பாடசாலை விளையாட்டு அபிவிருத்திக்கு பயன்படுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறித்த கலந்துரையாடலின் போது பணித்துள்ளார்.

Post a Comment

0 Comments