Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கடற்படை சிப்பாயின் மரணத்தில் தொடரும் மர்மம்

தம்புள்ளையில் அண்மையில் கடற்படை சிப்பாய் ஒருவர் திடீரென மரணமான சம்பவம்தொடர்பில் இன்னும் காரணம் கண்டறியப்படவில்லை.
தம்புள்ளை பேருந்து நிலையத்தில் வைத்து இந்த கடற்படை சிப்பாய் திடீரென மயங்கி விழுந்தபோது முச்சக்கர வண்டியொன்றின் ஓட்டுநர் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றார்.
எனினும் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேதபரிசோதனையின் பின்னரும் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
குறித்த சிப்பாய் சிறு வயதிலிருந்தே நோய்வாய்ப்பட்டவர் என்றும் அவருக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து அவரின் மாதிரிகள் தற்போது கொரோனா பரிசோதனைக்கும் சட்டவைத்திய அதிகாரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments