Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா தொற்று

இரண்டாம் இணைப்பு
கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இன்று மட்டும் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 423 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 97 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்காவில் மேலும் ஒருவக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 1090 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 674 பேர் குணமடைந்துள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments