Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அம்பன்புயலில் அள்ளுண்ட மீனவர்களின் படகுகளை மீட்க சென்றது கடற்படை கப்பல்

அம்பன் புயலினால் அள்ளுண்டு சென்று இந்தோனேசிய கடலோரத்தில் கரையொதுங்கியுள்ள இலங்கை மீனவர்களின் படகுகளை மீளக் கொண்டுவர ஸ்ரீலங்கா கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ஆழ்கடல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் சிறப்பு கப்பல் ஒன்று இன்று வியாழக்கிழமை காலை புறப்பட்டுச்சென்றுள்ளது என கடற்படை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட 30க்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்களின் படகுகள் இந்தோனேசிய கடல் எல்லையில் காணப்படுகின்றன.
இப்படியான அனர்த்த நேரங்களில் விரைந்து செயற்படுகின்ற கடற்படையின் மற்றுமொரு மனிதாபிமான நடவடிக்கையாக இந்த மீன்பிடிப் படகுகளை கொண்டுவரத் தேவையான எரிபொருள் உட்பட பொருட்களை அழ்கடல் கண்காணிப்புக் கப்பல் எடுத்துச் சென்றுள்ளது

Post a Comment

0 Comments