Home » » கல்முனையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது.

கல்முனையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது.

கல்முனையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது.
முன்னைய செய்தியோடு தொடர்புபட்டது....
( றம்ஸீன் முஹம்மட்)

அறிவும், செல்வமும், இயற்கை வளமும் இஸ்லாமிய வாழ்க்கை வழிமுறையும் கொண்ட மக்கள் தமிழ், சிங்கள் உறவுகளோடு கூடி கௌரவமாக வாழும் பூமியான கல்முனையில் பல அரசியல் தலைவர்களும் புத்திஜீவிகளும், உலமாகளும் தனவந்தர்களும் வாழ்ந்துவரும் சூழலில்  கொரனா வைரசு தொற்று காரணமாக வாழ்வாதாரங்கள், பிள்ளைகள் கல்வி, உறவுகள் என்பவற்றை இழந்து புனிதமிகு றமழான் மாதத்தில் மார்க்க கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் பலதுன்பங்களை அனுபவித்து வீடுகளில் இருந்து கொண்டு இறைவனிடம் அழுது துஆ கேட்டவண்ணம் மக்கள் நாட்களை கழித்து கொண்டிருக்க.  புனிதமிகு றமழான் மாதத்தில் தௌபாக்களில் ஈடுபவேண்டிய முஸ்லிம் என்று கூறிக்கொள்ளும் சில ஆண்களும் பெண்களும் சிறைச்சாலை சென்றிருப்பது மனவேதனையையளிக்கிறது.

இருதினங்களுக்கு முன்னர் கல்முனையின் போதைப்பொருள் விற்பனை செய்யும் சில பகுதிகளில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்களும் ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
புனிதமிகு றமழான் மாதத்தில் இவ்வாறான தொழிலில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது.போதைப்பொருள் வியாபாரத்தை இல்லாது ஒழிப்பதாக இருந்தால் சமுகத்திலுள்ள உலமாக்கள், புத்திஜீவிகள்,அரசியல் தலைவர்கள், வசதிபடைத்தவர்கள், மீனவர்கள்  , விவசாயிகள் மற்றும் ஏனைய தொழில் புரிவோர் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
"ஒரு முஸ்லிம் காலையில் எழும்பும் போது சமூகத்தைப் பற்றி சிந்திக்க வில்லையெனின் உண்மை முஃமீனாக மாறமுடியாது"   என்ற நபிமொழிக்கமைய நாம் எல்லோரும் போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்க சிந்தித்து செயற்படுவதோடு பாதுகாப்பு படையினருக்கும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
றமழானின் இறுதிப் பத்தில்  இருக்கும் நாம், போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும், அதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும், அதனைப் பாவிப்பவர்களுக்கும் அல்லாஹ் நேர்வழியைக் காட்டி  அதிலிருந்து மீண்டுவர இறைவனிடத்தில் பிறார்த்திப்போம்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |