Home » » முஸ்லீம்கள் புனித நோன்பு பெருநாளை அமைதியான முறையில் வீட்டிலிருந்து கொண்டாடுவதுடன் அரசின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளியுங்கள்

முஸ்லீம்கள் புனித நோன்பு பெருநாளை அமைதியான முறையில் வீட்டிலிருந்து கொண்டாடுவதுடன் அரசின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளியுங்கள்

( அஸ்ஹர் இப்றாஹிம் , எம்.எம்.ஜெஸ்மின்)



முஸ்லீம்கள் புனித நோன்பு பெருநாளை இவ்வருடம் அமைதியான முறையில் வீட்டிலிருந்து கொண்டாடுவதுடன் அரசின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளியுங்கள்.



இவ்வாறு சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

நாட்டில்  கொவிட் -19 கொரணா வைரசு தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக  மக்களின் அன்றாட  செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்ததுடன் , மக்களின் பொருளாதாரத்திலும்  பாரிய தாக்கத்தினையும் ஏற்படுத்தியிருந்தது.  குறிப்பாக முஸ்லிம் மக்கள் பள்ளிவாசலுக்கு சென்று தமது ஐங்கால தொழுகையில் ஈடுபட முடியாமல் சமூக இடைவெளியை பேணும் வகையில் வீட்டிலேயே தொழுகையில் ஈடுபட்டு வந்தனர். இன்று 10 வது ஜும் ஆத் தொழுகையை பள்ளிவாசல்களில் தொழ முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு இந்நாட்டிலுள்ள சகல முஸ்லீம்களும் தள்ளப்பட்டுள்ளனர்.



இருந்தும்  அரசாங்கத்தினதும் , சுகாதார பகுதியினரும் , பொலிசாரினதும் , முப்படையினரினதும்  வேண்டுகோளை மதித்து இவ்வளவு காலமும் பாதுகாப்பாக இருந்தது போன்று எதிர்வரும் நோன்பு பெருநாள் தினத்தன்று  அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை வழங்கும் ஆலோசனைக்கும் வழிகாட்டுதலுக்கும் அமைவாக நடந்து கொள்வதுடன் , தங்களது வழமையான நடவடிக்கைகளை சற்று தளர்த்தி வீணான ஒன்று கூடல் நிகழ்வுகளை தவிர்த்து குடும்பத்தினருடன் வீட்டிலிருந்து  கொண்டாடுமாறும் , பாதுகாப்பு படையினருக்கும் , பொலிஸாருக்கும் , சுகாதார பகுதியினருக்கும்  ஒத்துழைப்பு வழங்கி எம்மை மட்டுமல்ல இந்த உலகத்தையே இன்று அச்சத்திற்குள்ளாக்கியிருக்கும்  கொரணா வைரசு தொற்றிலிருந்து உலகிலுள்ள அனைவரையும் பாதுகாக்குமாறு இறைவனிடம் இரு கரம் ஏந்தி துவாப்பிரார்த்தனையில் ஈடுமாறும் கேட்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |