Home » » ஆரையம்பதி பிரதேசத்தில் பிடிபட்ட மாட்டு வியாபாரிகள்

ஆரையம்பதி பிரதேசத்தில் பிடிபட்ட மாட்டு வியாபாரிகள்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோதமாக கால் நடையாக 4 மாடுகளை கொண்டு சென்ற மாட்டு வியாபாரிகள் இருவரை எதிர்வரும் 15 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வினோபா இந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார் .

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கோவில்குளம், தாளங்குடா, மாவிலந்துறை, செல்வநகர் ஆரையம்பதி பிரதேசங்களில் அண்மைகாலமாக மாடுகள் திருடுப் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள சம்பவதினமான இன்று ஆரையம்பதி பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி நோக்கி இரண்டு மாடுகளை ஒன்றாக பிணைத்து 4 மாடுகளை கால் நடையாக இருவர் நடாத்திச் சென்ற நிலையில் பிரதேசசபை தவிசாள். பொதுசுகாதர உத்தியோகத்தர்கள், சுகாதார பணிப்பாளர் உள்ளிட்டோர் உடனடியாக இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கினர் .

இதணையடுத்து பொலிஸ் நிலைய பெறுப்பதிகாமட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோதமாக கால் நடையாக 4 மாடுகளை கொண்டுச் சென்ற மாட்டு வியாபாரிகள் இருவரை எதிர்வரும் 15 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வினோபா இந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார் .

ரி துமிந்த நயனசிறி ஆலோசனைக்கமைய பாரிய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் கே.எல்.எம். முஸ்தப்பா தலைமையிலான பொலிஸ் குழுவினர் உடனடியாக குறித்த இடத்திற்கு சென்று மாடுகளை கொண்டு சென்றவர்களை வழிமறித்து இருவரையும் கைது செய்துள்ளதுடன் 4 மாடுகளை மீட்டனர்.


இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகள் எனவும் சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுச் சென்ற மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறிச் சென்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வினோபா இந்திரன் முன்னிலையில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையும் எதிர்வரும் 15 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார் 

இதேவேளை குறித்த மாட்டின் மீதுள்ள குறியீட்டை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மாடுகள் திருட்டுப்போனவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அவர்களுடைய மாடுகளா என சென்று பார்வையிட்ட முடியும் என பொலிசார் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |