Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி; 51பேர் கைது! 40 இலட்சம் தண்டப் பணம் அறவீடு

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கசிப்பு வியாபாரம் மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 51 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 40 இலட்சம் ரூபா தண்டப்பணமாக அறவீடு செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் சட்டவிரோத கசிப்பு வியாபாரம் மற்றும் கசிப்பு உற்பத்தி நிலையங்களை சுற்றிவளைத்து முற்றுகையிடப்பட்டபோது 51 பேரை கைது செய்ததுடன் பெருமளவிலான கசிப்பு , கோடா, பெரல்கள், மற்றும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள் மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கரவண்டிகள் என்பனவற்றை பொலிசார் கைப்பற்றினர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் அவர்களுடைய குற்றத்திற்கு ஏற்ப தண்டப்பணங்களை செலுத்த தீர்ப்பளித்தார்.

இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டவா்களில் தண்டப்பணமாக 40 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதுடன் தீர்ப்பு வழங்காத ஏனையவர்களின் வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர் .

Post a Comment

0 Comments