மருத்துவ பீட இறுதிவருட மாணவர்களுக்காக பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாடசாலைகள் பல்கலைக்ழகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மருத்துவபீட மாணவர்களின் பரீட்சைகளுக்காக பல்கலைக்கழகங்கள் ஜூன் 15 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விடுதிகளில் ஒரு மாணவருக்கு ஒரு அறை என்ற அடிப்படையில் தங்கவைக்கப்படவுள்ள மாணவர்கள் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்களென தெரிவிக்கப்படுகிறது.
0 comments: