Home » » உலகையும் நாட்டையும் பீடித்துள்ள அவலம் நீங்க நாம் எல்லோரும் பிரார்த்தித்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெற வேண்டுகிறேன் : அக்கரைப்பற்று மாநகர முதல்வர்.

உலகையும் நாட்டையும் பீடித்துள்ள அவலம் நீங்க நாம் எல்லோரும் பிரார்த்தித்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெற வேண்டுகிறேன் : அக்கரைப்பற்று மாநகர முதல்வர்.

நூருல் ஹுதா உமர்

மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் புனித ரமழான் மாதத்தின் மாண்புகளையும், நன்மைகளையும்  குறைவில்லாது பெற கட்டுக்கோப்புடன் கடைப்பிடித்து இனிய பெருநாளை அடையவைத்த அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். அல்-ஹம்துல்லாஹ் !

உலகையும், எம்மையும் அச்சுறுத்தி காலாதிகாலமாக நாம் இன்பமாய் அனுபவித்த பெருநாளை இம்முறை மிகவும் கவனமாக நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அர்பணிப்புடன் கொண்டாடி, ஏனைய மதத்தினர் கடந்த காலங்களில் கொண்டாட முடியாமல் போன உற்சவங்களை மனதில் கொண்டு, எப்போதும் முன்னுதாரணமான சமூகமாக நாம் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.என அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

பெருநாள் என்பது புத்தாடை அணிந்து, உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று, பயணங்கள் மேற்கொண்டு, சிறுவர்கள், குழந்தைகள் மகிழ்வோடு கொண்டாடி, ஏழைகளுக்கு உணவளித்து, மனதிற்கு இதமாக கடந்து செல்லும், இறைவனின் பறக்கத் பொருந்திய புனிதமான நாள் அது. இப் பெருநாள் தினத்தில் வீடுகளில் இருந்தபடியே பொருநாள் தொழுகையினை தொழுது, உலகையும் நாட்டையும் பீடித்துள்ள அவலம் நீங்க நாம் எல்லோரும் பிரார்த்தித்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெற வேண்டுகிறேன் !

மலர்ந்திருக்கும் இப்புனித மிகு நோன்புப் பெருநாளினை அடையும் பாக்கியத்தினை கிடைக்கப்பெற்ற உங்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அக மகிழ்வடைகிறேன் என மேலும் அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |