Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திடீரென மலசலகூடத்திற்கு முன்பாக விழுந்த இராணு வீரர் உயிரிழப்பு..

தம்புள்ளை பேருந்து நிலைய வளாகத்தில் காணப்படும் பொது மலசலகூடத்திற்கு முன்பாக இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திடீரென விழுந்த குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கம பகுதியில் காணப்படும் இராணுவ முகாமில் கடமையாற்றிய கலேவெல பள்ளேபொல பகுதியை சேரந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ வீரர் விழுந்த தருணத்தில் சுமார் 30 நிமிடங்கள் வரை எவரும் அருகில் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 நிமிடங்களின் பின்னர் இளைஞர்கள் சிலர் இணைந்து முச்சக்கர வண்டியில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Post a Comment

0 Comments