Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஏறாவூர் பொலிஸ் பிரிவு கோரகள்ளிமடு பிரதேசத்தில் 20 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை.

மட்டக்களப்பில் அநியாயமாக ஒரு ஏழை தமிழனை கொன்று போட்டேங்களே???இனியாவது நிம்மதியாக தூங்குவேர்களா???

செய்யாத குற்றத்தை, #செய்ததாக குற்றம்சாட்டியதால்,  மனவேதனையுற்ற 20 வயது இளைஞன் தூக்கிட்டுதற்கொலை.


ஏறாவூர் பொலிஸ் பிரிவு கோரகள்ளிமடு பிரதேசத்தில் நேற்று மாலை சம்பவம்.

சுமைதூக்கும் தொழில் செய்துவரும் தந்தைக்கும்,
விறகு வெட்டும் தொழில் செய்துவரும் தாய்க்கும் பிறந்த இவ் இளைஞனே பரிதாபமாக தற்கொலையை தழுவிக்கொண்டார்.

சென்ற வாரம் காட்டுக்குள் விறகு வெட்டச்சென்ற இவரது தாய்,
அக்காட்டுக்குள் பைப்லைன் செய்யப்பட்ட ஒரு தொகுதி குழாய்கள் வீசப்பட்டுக்கிடப்பதை அவதானித்து, தனது மகனிடம் தெரிவிக்க,

அதனை நண்பர்கள் இருவருடன் சென்று எடுத்து வந்து தனது வீட்டுவாசலில் வைத்திருக்கிறார்.

இதனை அவதானித்த அயல் வீட்டார், இவ் இளைஞர்கள்  இக் குழாய்களை திருடி வந்திருப்பதாக, கருதி

ஏற்கனவே குழாய்களை களவுகொடுத்த கிரானை சேர்ந்த நபரிடம் விடயத்தை தெரிவிக்க,
பொலிஸ் நிலையம் வரை முறைப்பாடு  சென்று, விசாரித்தபின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இளைஞர்களை,

நேற்று (12/05) மதியம் வலுக்கட்டாயமாக கிரானை சேர்ந்த நபர்  இவ் இளைஞர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று, களவெடுத்ததை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்திய நிலையில்,

 வீடு திரும்பிய இளைஞன்
மன உளைச்சலுக்குள்ளாகி   தற்கொலை செய்து கொண்டான் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

மகனை காணவில்லையென கிரானை சேர்ந்த அந்த நபரின் வீட்டுக்கு பெற்றோர் சென்றபோது, அவர்களை கால்களால் உதைத்து அனுப்பியதாகவும் அழுதழுது தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments