Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தரம் 10க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்?

பாடசாலைகள்.. பரீட்சைகளை நோக்கமாகக் கொண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பீதியின் காரணமாக அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. மாறாக, பிரதான பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்காக தரம் 10க்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கு மட்டும் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் எவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்பது குறித்து கல்வி, மாகாண கல்வி பணிப்பாளகளுக்கு சில ஆலோசனை வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக அனைத்து பாடசாலைகளும் கிருமித் தொற்று நீக்கப்படுவதுடன் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு கிருமித் தொற்று நீக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

0 Comments