Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நற்பிட்டிமுனை மேன்ஸ் (MANS) சமூக சேவைகள் அமைப்பின் அனர்த்த நிவாரண சேவைகள் செயலணி!!

 
நூருல் ஹுதா உமர் 

நற்பிட்டிமுனை மேன்ஸ் (MANS) சமூக சேவைகள் அமைப்பின் அனர்த்த நிவாரண சேவைகள் செயலணி ஏற்பாடு செய்த தற்போதைய அசாதரண சூழல் காரணமாக நாளாந்த தொழிலை இழந்த குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு வெள்ளிக் கிழமை (03) நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், நற்பிட்டிமுனை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஜே.எம்.றிசான் (மௌலவி), நற்பிட்டிமுனை மேன்ஸ் ஸ்தாபக தலைவரும் தேசிய காங்கிரஸின் அமைப்பாளருமான சப்றோஸ் ஜமால், நற்பிட்டிமுனை மேன்ஸ் அமைப்பின் தவிசாளரும் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எச்.எச்.எம்.நபார், செயலணித் தலைவர் ஜே.எம்.மிஹ்ளார்,   மற்றும் இராணுவத்தினர் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த நிவாரண பொதிகளை வழங்கிவைத்தனர்.



கணவனை இழந்த தாய்மார்கள், அங்கவீனமுற்றோர்கள், முதியோர்கள் என பலருக்கும் இந்நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இன்னும் கட்டம் கட்டமாக 450 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்படவுளது என அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments