தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்பை நிறைவு செய்து வீடு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது ஒருவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தென் கொரியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி இவர் நாடு திரும்பியுள்ளார்.அங்கிருந்து அவர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
14 நாட்கள் தங்கியிருந்த அவர் மார்ச் 24 ஆம் திகதி மத்துகமவிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பியிருந்தார்.
எனினும், வயிற்று வலி மற்றும் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் களுத்தறையில் உள்ள நாகொடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், கொவிட் -19 நோய்த்தொற்றுக்குள்ளானவர் என்று நிரூபிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக ஐ.டி.எச்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 Comments