Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அம்பியூலன்சில் மதுபானப்போத்தல்கள் கடத்திய வைத்தியசாலை ஊழியர்கள் பிடிபட்டனர்!

நோயாளர் காவு வண்டியினை பயன்படுத்தி மதுபான போத்தல்களை கொன்று சென்ற வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவாகம காலியங்கல பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்திற்குள் 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் 125 சாராயப்போத்தல்கள் காணப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

நோயாளர் காவு வண்டியினை செலுத்திய சாரதி மற்றும் அவரின் உதவியாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு அவர்கள் இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரைணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலநறுவை வைத்தியசாலைக்கு சொந்தமாக குறித்த வண்டி கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Post a Comment

0 Comments