அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகமே ஸ்தம்பிதமடைந்துள்ளது. உலகளவில் 210 இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்டுள்ளது.
குறிப்பாக இத்தாலி பிரான்ஸ் அமெரிக்காக பிரித்தானியா ஸ்பெயின் போன்ற நாடுகளை கொரோனா வைரஸ் பெரிதும் பாதித்துள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்காவும் கொரோனா தொற்றுக்கு முகம் கொடுத்துள்ளது. தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 218 பேர் கொரோனா தொற்றுள்ளவர்கள் என உறுதிப்aபடுத்தப்பட்டுள்னர்.
இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.
தற்போது இக்கட்டான சூழ்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது என தெரிவித்த அவர் இந்நிலையில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், சுகாதார துறையினர் குறிப்பிடும் ஆலோசனைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இந்நிலைமை அடுத்த மாதம் முதல் வாரம் வரைக்கும் நீடிக்கும் என கூறினார்.
இதனை தொடர்ந்து மே மாத இறுதியில் பொது தேர்தல் இடம்பெற்று பலமானதொரு அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் அவ்வாறு அமைக்கப்படும் அரசாங்கத்தினால் போதுமான அளவு மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அவ்வாறானதொரு பலமான அரசாங்கம் தோற்றம் பெற்றாலே பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க முடியும் என குறிப்பிட்ட அவர், எனவே பொதுத் தேர்தலின்போது மக்கள் சிறந்ததொரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
0 Comments