Home » » காரைதீவுப் பகுதியில் கொரோனா தொற்றியுள்ளமை தொடர்பான செய்தி பற்றி டாக்டர் சுகுணன் (கல்.சு.பணி) கருத்து

காரைதீவுப் பகுதியில் கொரோனா தொற்றியுள்ளமை தொடர்பான செய்தி பற்றி டாக்டர் சுகுணன் (கல்.சு.பணி) கருத்து


(பாறுக் ஷிஹான்)
காரைதீவு பகுதியில் கொரோனா தொற்றியுள்ளனமை வெறும் வதந்தி என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை(12) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற நிலையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் மேலும் தனது கருத்தில்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் இரண்டு புதிய கொரோனா நோயாளிகள் அடையாளப்படுத்தி இருப்பதாக சில முகநூல் செய்திகள் உலா வருவதாக நண்பர்கள் மூலமாக அறிய முடிந்தது. இது ஒரு வதந்தி பரப்பப்பட்டு கொண்டிருக்கின்றது. இன்றுவரை இந்த நிமிடம் வரை எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எந்தவிதமான நோயாளிகளும் காரைதீவு பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்படவில்லை .ஆகவே மக்கள் தங்களுக்குரிய சாதாரணமாக நடைமுறையை நீங்கள் மேற்கொள்ளுங்கள். தற்போது வரையில் அங்கு எந்தவிதமான தொற்றாளர்களும் அடையாளப்படுத்தப் நடைபெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்ள முடியும்.

இதே வேளை எமது பிராந்தியத்தை பொறுத்தவரையில் ஒலுவில் துறைமுகப் பகுதியில் கடற்படையினரால் ஒரு தனிமைப்படுத்தல் மையம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.கொழும்பு பகுதியில் தனிமைப்படுத்தல் விடயங்களுக்கு ஒத்துழைக்காத சில நபர்களை இராணுவத்தினர் மூலம் அழைத்து வரப்பட்டு தற்போது சிகிச்சை வழங்கப்படுகிறது. அதில் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி அழைத்துவரப்பட்ட அந்த 28 பேரில் 5 பேர் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். அவர்கள் ஒலுவில் துறைமுக கடற்படையினரின் தனிமைப்படுத்தல் முகாமில் வைத்து பராமரிக்க படுகிறார்கள் .இன்னும் 52 பேர் மொத்தமாக இந்த கல்முனைப் பிராந்தியத்தில் துறைமுக கடற்படையினரின் தனிமைப்படுத்த முகாமில் வைக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன் என கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |