Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 31 கொரோனா தொற்றாளர்களில் 21 பேர் கடற்படை சிப்பாய்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போதுவரை 619 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில், பொது மக்கள் தொடர்ந்தும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்குமாறும், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியே செல்ல வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments