Home » » கொரோனா பரவல் அதிகரிப்பு-பிரதேச செயலாளர் மட்டத்தில் சுகாதார அவசர நடவடிக்கை மத்திய நிலையம்

கொரோனா பரவல் அதிகரிப்பு-பிரதேச செயலாளர் மட்டத்தில் சுகாதார அவசர நடவடிக்கை மத்திய நிலையம்

COVID-19 வைரசு தொற்றை தடுப்பதற்காக சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட செயற்பாட்டு அவசர நடவடிக்கை மத்திய நிலையத்தை பிரதேச செயலாளர் மட்டத்தில் செயற்பாட்டு அலகாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிருவாக அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு விசேட நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் சுகாதார அமைச்சின் செயற்திறன் குழுவின் மீளாய்வு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தேசிய வைத்திய பிரிவினரால் நிறுவப்பட்டுள்ள இந்த விசேட செயற்திறன் குழுவின் கூட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னி ஆராச்சி தலைமையில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு செயல்திறன் மீளாய்வு ஆய்வுக் குழுவை பிரதி நிதித்துவப்படுத்தி, சுகாதார சேவை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜெயவர்தன, மேலதிக செயலாளர்கள் வைத்தியர் சுனில் த அல்விஸ், வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க, 

சுகாதார சேவைகள் துணை இயக்குநர் வைத்தியர் அமல் ஹர்ஷ த சில்வா, வைத்தியர் லால் பனாபிடிய, வைத்தியர் பபா பலிஹவடன, சுகாதார அமைச்சரும் ஜனாதிபதியின் பிரத்தியோக செயலாளரும் சபரகமுவா மாகாண சபை தலைவருமான காஞ்சன ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் பரவும் வீதம் அதிகரித்து காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்படவேண்டிய விசேட நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களும் இதன் போது மேற்கொள்ளப்பட்டன.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான சகல வசதிகள் பற்றியும் ஆராயப்பட்டது.

நோயாளிகளை பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலையின் அனைத்து பிரிவினரின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில நிர்வாகக் குழுவினர் மூலம் சேவைகளை பெறுவது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் இவ் விசேட கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் போது பிரதேச மட்டத்தில் பெரும் சேவையை நடத்தும் சுகாதார அதிகாரிகள் காரியாலயங்களுக்கு அவசியமான வாகன வசதிகளையும், PCR பரிசோதனைகளை அதிகரிப்தற்கு தேவையான உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடம் பெற்றுக்கொள்ளும் கடனுதவி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |