Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று தனிமைப்படுத்தல் மையங்களுக்கு வெளியே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண் தொடர்பில் வெளியான பல முக்கிய தகவல்கள்


கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் ஒருவர் இனங்காணப்பட்ட நிலையில் அவர் தொடர்பில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய மருத்துவமனையில் கொரோனா நோயாளர் என நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்ட பெண், இந்தியாவிற்கு சென்று நாடு திரும்பி 33 நாட்களுக்கு பின்னரே தொற்றுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

59 வயதான அந்த பெண், கொழும்பு வாழைத்தோட்டம் - பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

நுகேகொடை பகுதியில் யாத்திரைக்கா நபர்களை அழைத்து செல்லும் நிறுவனம் ஒன்றின் ஊடாக கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி குறித்த பெண் தனது கணவர் மற்றும் மூத்த புதல்வருடன் தம்பதிவவிற்கு யாத்திரை சென்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

அந்த பெண் நாடு திரும்பிய பின்னர் காவல்துறையில் பதிவு செய்து 14 நாட்கள் வீட்டினுள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானதாக வாழைத்தோட்ட காவல்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை தமக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக குறித்த பெண் அறிவித்துள்ள நிலையில் கொழும்பு மாநகர சபையின் சுகாதார பிரிவினர் அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த பெண்ணுடன் யாத்திரை சென்ற அவரது கணவர், மூத்த புதல்வருடன் ஏனைய இரண்டு புதல்வர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவரது மூத்த புதல்வரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகவில்லை.

இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் அவரின் வீடு அமைந்துள்ள வாழைத்தோட்டம் - பண்டாரநாயக்க பிரதேசத்தில் உள்ள 58 வீடுகளில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று தனிமைப்படுத்தல் மையங்களுக்கு வெளியே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண் தொடர்பில் வெளியான பல முக்கிய தகவல்கள்

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith

Post a Comment

0 Comments