Home » » இவ்வருட ஐ.பி.எல் போட்டிகளை இலங்கையில் நடத்த முடியும் - இலங்கை கிரிக்கட் சபை

இவ்வருட ஐ.பி.எல் போட்டிகளை இலங்கையில் நடத்த முடியும் - இலங்கை கிரிக்கட் சபை


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரை இலங்கையில் இந்த ஆண்டு நடத்த முடியும் என்று இலங்கை கிரிக்கட் சபை, இந்திய கிரிக்கட் சபைக்கு தெரிவித்து உள்ளது.

மே மாதம் 3 வரை இந்தியா முழுதும் ஊரடங்கு காணப் படுவதால் ஐ.பி.எல் போட்டிகள் மறு அறிவிப்பு வரை பின் போடப்பட்டு உள்ளன.

இலங்கையில் சில தினஙகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறையும் பட்சத தில் இந்தியா, இலங்கையிடம் இது பற்றி கேட்க வாய்ப்பு உள்ளது என இலங்கை கிரிக்கட் சபை தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வருட ஐ.பி.எல் தொடர் கைவிடப் பட்டால் இந்திய கிரிக்கட் சபை $500 மில்லியல டாலர் வரை இழக்கும்.

இதனை தவிர்க்க 2009 இல் தென் ஆபிரிக்காவில் நடத்தியது போல் இலங்கையில் நடத்த முடியும் எனவும்,

இந்த திட்டத்திற்கு அவர்களிடம் இருந்து பதில் வந்தால், ஸ்ரீலங்கா சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வைக்கு கீழ் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். "

என மேலும் தெரிவித்தார்.
இவ்வருட ஐ.பி.எல் போட்டிகளை இலங்கையில் நடத்த முடியும் - இலங்கை கிரிக்கட் சபை

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |