Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமுலானது!

இன்று காலை 06 மணிக்கு  19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 04.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

மேலும் நாட்டின் 19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டு அமுலான ஊரடங்கு ஏப்ரல் 20 திங்கள் காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும், 20ஆம் திகதி காலை 6.00 மணிக்கு பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

அத்துடன், கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments