Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் ஊரடங்கு நீடிப்பு : ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிவிப்பு

கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவந்த நிலையில் மீண்டும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கொரோனா அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதுடன் மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேபோல் கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மே 4 ஆம் திகதி தளர்த்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் மீண்டும் அன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments