கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படும் சீனாவின் வுகான் நகர ஆய்வுகூட விஞ்ஞானிகள் முற்றிலும் பைத்தியக்காரத்தனமான விடயங்களில் ஈடுபட்டிருந்தனர் என உலகின் பிரபலமான பேராசிரியர் பெட்ர் சுமாகோவ் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் 210 இற்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது. தினமும் ஆயிரம் ஆயிரமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இந்த கொடிாய கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்தே பரவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் உலகின் பிரபலமான பேராசிரியர் பெட்ர் சுமாகோவ் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
வுகான் ஆய்வுகூடத்தின் விஞ்ஞானிகள் ஆய்வுகூடத்தில் பல குழப்பமான முயற்சிகளில் ஈடுபட்டமையே வைரஸ் பரவியமைக்கு காரணம்.
வுகான் விஞ்ஞானிகளின் நோக்கம் வைரசின் நோய்கிருமித்தன்மைiய அறிந்துகொள்வது மாத்திரமே அவர்கள் வேண்டுமென்று எந்த கொலைகாரனையும் உருவாக்கவில்லை.
கடந்த பத்து வருடங்களாக வுகான் ஆய்வுகூடத்தின் விஞ்ஞானிகள் பல்வேறு கொரோனா வைரஸ் வகைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
எனக்கு தெரிந்த அளவில் முற்றிலும் பைத்தியக்காரத்தனமான விடயங்களில் ஈடுபட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments: