Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் நாய்க்கு கொரோனா தொற்று? சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் நாயொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து குறித்த நாயை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜா -எல சுதுவெல்ல பகுதியில் உள்ள நாயொன்றுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படுகின்றது.
நாய்க்கு கடும் இருமல் உட்பட மேலும் சில அறிகுறிகள் தென்பட்டுள்ளதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
“இது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனை நடத்துமாறு கூறியுள்ளேன். பரிசோதனைகளின் பின்னரே இது பற்றி எதுவும் கூறமுடியும்.” – என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments