Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கோரோனா வைரஸ் மரபணு இலங்கையின் பகுப்பாய்வு: இலங்கை, அமெரிக்காவில் பரவுவது ஏ வகை!


கொரோனா வைரஸின் ஏ வகைகள் இலங்கைக்குள் பரவிவருவதை இலங்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
COVID-19 SARS-CoV2 வகையின் ஏ வகை இலங்கைக்குள் வேகமாக பரவி வருவதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆராய்ச்சிப் பிரிவு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள், கோவிட்-19 வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்தியுள்ளனர். வைரஸின் மரபணுவை இலங்கையில் வகைப்படுத்திய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கொரோனா வைரஸில் ஏ,பி,சி ஆகிய அடிப்படை வகைகளை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இலங்கை, அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில் ஏ வகை வைரஸ் பரவி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் சி வகை வைரஸ் பரவுவதாக தெரிவித்துள்ளனர்.
கோவிட் -19 நோயாளிகளைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர் பரிசோதனையை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியர் நீலிகா மலாவிஜ் நடத்தி வருகிறார். இந்த ஆராய்ச்சிக்கும் அவரே தலைமைதாங்கினார்.
COVID-19 நோய்த்தொற்றுடையவர்களின் உயிரியல் மாதிரிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வைரஸ் ஆர்.என்.ஏ (ரிபோ நியூக்ளிக் ஆசிட்) தரவுத்தொகுப்பின் பகுப்பாய்வில் இது கண்டறியப்பட்டது.
பேராசிரியர் நீலிகா மலாவிஜின், டொக்டர் ஜெயசுந்தரா, டொக்டர் சந்திம ஜீவந்தரா மற்றும் அறிவியல் பீடத்துடன் இணைக்கப்பட்ட பிற ஆராய்ச்சி விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் பங்ககேற்றிருந்தனர்.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கொரோனா உயிரிழப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம், தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூரில், இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. வைரஸின் வகைகளால் இந்த வித்தியாசம் பதிவாகியிருக்கலாமென கருதப்படுகிறது.
“இது ஒரு புதிய வைரஸ் ஆகும், இது இலங்கையின் வைரஸ் மரபணுக்களில் உள்ள வேறுபாடுகளையும் பிற நாடுகளில் உள்ள வேறுபாடுகளையும் நாம் கவனிக்க வேண்டும், சிங்கப்பூரில் செயற்படும் தடுப்பூசி இலங்கையில் செயல்படுமா என்பதைப் பார்க்க வேண்டும்,” என்றார் மலாவிஜ்.

Post a Comment

0 Comments