சீனாவின் தென்கடல் பகுதியில் அமெரிக்காவின் போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த நான்கு நாட்களாக மலேசியாவின் கடல் எல்லைக்குள் சீனாவின் Haiyang Dizhi போர் கப்பல்கள் சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
முக்கியமாக மலேசியாவின் எண்ணெய் கிணறுகள் இருக்கும் பகுதியை நோக்கி சுற்றி சுற்றி வருகிறது.
மலேசியா இதனால் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது. இதனால் நான்கு நாட்களாக பதற்றம் நிலவுகிறது.
ஆனால் அமெரிக்கா இதை விடவில்லை. இந்த விஷயம் தெரிந்ததும் தற்போது அமெரிக்கா தனது போர் கப்பல்களை அந்த கடல் பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளது.
மொத்தம் 6 போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்து உள்ளது.
USS Bunker Hill எனப்படும் ஏவுகணைகளை கொண்ட மிகப்பெரிய கப்பல்களை அமெரிக்கா சீனாவின் எல்லைக்குள் நிறுத்தி வைத்து உள்ளது.
USS Barry எனப்படும் இன்னொரு போர் கப்பலும் அங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த போர் கப்பலுடன் அவுஸ்திரேலியாவின் போர் கப்பலும் இணைந்துள்ளது. இதனால் அங்கு கடுமையான பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் போர் கப்பலில் இருந்து வெறும் 20 கிமீ தூரத்தில்தான் அமெரிக்காவின் இந்த போர் கப்பல்கள் இருக்கிறது.
இதனால் அங்கு போர் ஏற்பட போகிறதா ஏதாவது சண்டை ஏற்பட போகிறதா என்று அச்சம் ஏற்பட தொடங்கி உள்ளது.
ஏற்கனவே கொரோனா காரணமாக சீனா, அமெரிக்கா இடையே கடுமையான பிரச்சனை உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments