Home » » கொரோனா உங்களை நெருங்காது! யாழ்.பத்திரிகையில் வெளியான விளம்பரம் தொடர்பில் கடும் கோபமடைந்த பிரதமர் மகிந்த

கொரோனா உங்களை நெருங்காது! யாழ்.பத்திரிகையில் வெளியான விளம்பரம் தொடர்பில் கடும் கோபமடைந்த பிரதமர் மகிந்த

யாழ்ப்பாண ஊடகங்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார்.
கட்சித் தலைவர்களுடனான கூட்டம் நேற்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் தற்போது நாட்டில் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கவிட்டிருக்கிறது.
இதற்கிடையில், சுகாதார அமைச்சும், அமைப்புக்களும் களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், சில ஊடகங்கள் பொறுப்பற்ற விதத்தில் செயல்படுவது தொடர்பில் தற்போது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக யாழ். ஊடகங்கள் தொடர்பில் பிரதமர் அதிருப்தி அடைந்திருக்கிறார்.
இது தொடர்பில் பகிரங்கமாக பேசிய பிரதமர்,
“நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனது கைகளில் இந்த விளம்பரம் கிடைத்தது. கொரோனா உங்களை நெருங்காது. இவ்வாறு குறிப்பிட்டு யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்து கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளனர்.
இலக்கம் 14 ராசாவத்தை சுதுமலை வீதி மானிப்பாய். ஜெபக் கூட்டம் ஒன்று வருமாறு கூறப்பட்டுள்ளது. இந்த ஜெபக் கூட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.
வடக்கில் பத்திரிகைகளில் இப்படியான விளம்பரங்களை வெளியிட அனுமதிக்க வேண்டாம். குறிப்பாக உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
பத்திரிகை உரிமையாளர் யார் என்று எனக்கு தெரியாது, நீங்கள் அவருக்கு ஆலோசனை வழங்குங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |