கொழும்பு கடற்படையின் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எலிக்காய்ச்சல் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அதிகாரியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கலேன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய லெப்டினட் கமாண்டர் சுனில் பண்டார தொடங்வல என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடற்படையின் தலைமையகத்திலே கடமை புரிந்து வந்துள்ளார்.
இவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைகளுக்கமைய அவர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டிருந்ததுடன், வெலிசர கடற்படை முகாமில் இருந்த கடற்படையினருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து, இவருக்கும் வைரஸ் தொற்ற ஏற்பட்டுள்ளதா? என்பதை அறிவதற்காக வைத்தியர்கள் பரிசோதனைகளை முன்னெடுத்திருந்ததுடன், இதன்போது அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எலிக்காய்ச்சல் காரணமாக அவசரப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இவர் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதியாகியுள்ள போதிலும், வெலிசறை முகாமில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு, அவரது உடலை கொனோரா வைரஸ் தொற்றுக்குள்ளகி உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வதுபோல் தகனம் செய்யுமாறு றாகம சட்டவைத்தியர் பிரிவு உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய கடற்படையின் மரியாதைகளுடன் இறுதிகிரியைகள் இடம்பெறவுள்ளன.

0 comments: