Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் தொற்றை முற்றாக அழித்து விட முடியாது!!

சீன மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கொரோனா தொற்றை முழுமையாக அழிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றானது புளூ போன்று அது அவ்வப்போது தனது கைவரிசையை காட்டிக் கொண்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா மனிதர்களிடையே வெகு காலம் நீடித்து இருக்கும் என சீனாவின் நோய்க்கிருமி ஆய்வு கழக இயக்குநர் ஜின் கி (Jin Qi) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் குளிர்காலம் வரும் போதெல்லாம் உச்சபட்ச தொற்றை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் தொற்று நோய் கழக இயக்குநர் அந்தோணி பவுசி (Anthony Fauci) உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

இதே கருத்தை குஜராத் இந்திய பொது சுகாதார கழகத்தின் இயக்குநர் திலீப் மாலவான்கர் (Dileep Mavalankar) அறிகுறிகள் இல்லாமல், வேகமாக பரவும் திறன் கொரானாவுக்கு உள்ளது.

ஆகவே மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் அது நீண்டகாலம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சீசன் நோயான புளூ, ஒவ்வொரு ஆண்டும் உலகில் 3 லட்சம் முதல் ஆறரை லட்சம் பேரின் உயிரை பறித்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments