Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நீர் நிரப்பப்பட்ட வாளியில் சிறுவன் தவறி விழுந்து பரிதாப உயிரிழப்பு

(ஷமி மண்டூர்)

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை உன்னிச்சை பகுதியைச்சேர்ந்த 2 வயது சிறுவன் நீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் 28ம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் பன்சேனையைச் சேர்ந்த 2 வயதுடைய இந்திரகுமார் றுஸ்மிதன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இறந்த சிறுவனும் அதேவயதுடைய அயல் வீட்டு சிறுவனும் அவர்களின் வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது முற்றத்தில் குடிப்பதற்காக நீர் நிரப்பிவைக்கப்பட்டிருற்த வாளியில் சிறுவன் விழுந்துள்ளார்.

அவருடன் விளையாடிக்கொண்டிருந்த மற்றைய சிறுவனின் அழுகுரலை கேட்ட தாய் ஓடிவந்து பார்த்த போது சிறுவன் நீர்வாளியில் கிடப்பதனை கண்டு உடனே மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது வைத்தியர் சிறுவன் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் அவர்களின் பணிப்புக்கமைய திடீர் மரணவிசாரணை அதிகாரி சந்திரவதனா நிஸ்ரமானந்தராசா சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் பற்றிய விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments