Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டோம்! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள தகவல்

ஸ்ரீலங்கா கடற்படையினர் மத்தியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளங்காணும் செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களின் பரிசோதனை முடிவுகள் எப்படி இருக்கின்றன என்பது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,
ஸ்ரீலங்கா கடற்படையினர் மத்தியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளங்காணும் செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இவர்களினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இவர்களைச் சார்ந்த குடியிருப்பாளர்கள் மற்றும் அயலவர்களாவர்.
இருப்பினும் கடற்படையினருடன் நெருக்கமான தொடர்புகளைக்கொண்டிருந்தவர்களுக்கு வைரஸ் தொற்றுத் தொடர்பிலான விடயத்தில் சுகாதார மற்றும் புலனாய்வுப்பிரிவினார் கவனம் செலுத்திவருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 31 பேர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்னர் அடையாளம் காணப்பட்டவர்களில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் மேலும் 6 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களேயாவர். அவர்களில் நான்கு இராணு வீரர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 15 கடற்படை வீரர்கள் வெலிசறையைச் நேர்ந்த ஏனைய வீர்கள். ஏனையோர் மெதிரிகிரிய, அகலவத்த ,ஹபரண ஆகிய பிரதேங்களில் பதிவாகியிருக்கின்றன.
இதேவேளை, நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை மொத்தம் 180 க்கும் மேற்பட்ட கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெலிசறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 619 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 478 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments