Home » » மீளவும் சீனாவில் கொரோனா அலை : மக்களிடையே கடும் அச்சம் - முக்கிய செய்திகள்

மீளவும் சீனாவில் கொரோனா அலை : மக்களிடையே கடும் அச்சம் - முக்கிய செய்திகள்

மீளவும் சீன மாகாணம் ஒன்றில் கொரோனா பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாக பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் Henan மாகாணத்தில் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியுள்ளதால் அது இரண்டாவது கொரோனா அலையாக இருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக Daily Express என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Jia பகுதியில் உள்ள ‘மக்கள் மருத்துவமனை’ ஊழியர்களிடையே இந்த தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒரு ஊழியர், கொரோனா உருவாகியதாக கருதப்படும் வுஹானில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்துவிட்டு இப்போதுதான் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் கொரோனா பரவுவதையடுத்து அதிகாரிகள் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
வீடுகளிலிருந்து வெளியே வருவோர் முக கவசங்களை அணிய அறிவுறுத்தப்படுவதுடன், அவர்களது உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்படுவதாவும் கூறப்படுகிறது.
அத்துடன் பல்பொருள் அங்காடிகள் மற்றும் விவசாய சந்தைகள் தவிர்த்து Jia பகுதியில் பிற தொழில்கள் இயங்கவில்லை என்றும் Daily Express தெரிவிக்கிறது.
சீன சமூக ஊடகமான Weiboவில் தங்கள் கருத்துக்களை கொட்டியுள்ள மக்களை மேற்கோள் காட்டி, சில விடயங்களை அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அவர்கள், எல்லாமே மூடப்பட்டுள்ளது, மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர், யாரும் நகருக்குள் போக முடியாது, அப்படியே போனால் அவ்வளவுதான், திரும்ப வரமுடியாது என்று கூறியுள்ளனர்.
ஒருவர், அரசின் நடவடிக்கைகளால் கொள்ளைநோய் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக பலர் கருதுகின்றனர், அது உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |