Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு உட்பட சுகாதார அமைச்சின் விசேட தீர்மானங்கள்

சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் சுகாதார அவசரகால செயற்பாட்டு மையம் பிரதேச செயலக மட்டத்தில் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவிவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் தலைமையில் இன்று (25) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

சுகாதார அமைச்சால் ஏற்படுத்தப்பட்ட விசேட செயற்றிரன் தொடர்பான மீளாய்வு குழு கூட்டமே இவ்வாறு நடைப்பெற்றது.

இந்த செயற்குழுவில் 35 மருத்துவ அதிகாரிகள், நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் 35 விசேட வைத்தியர்களும் அடங்குகின்றனர்.

இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள சுகாதார அவசரகால செயல்பாட்டு மையம் பிரதேச செயலக மட்டத்திலும் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

அதன்படி, ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்படுவது குறித்த தகவல்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக குறித்த சுகாதார அவசரகால செயற்பாட்டு மையத்திற்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனஞ் செலுத்தப்பட்டது.

மேலும் இது குறித்த செயற்பாடுகளை அரச நிர்வாகம் மற்றும் சுதேச நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றின் ஊடாகவும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை 55 ஆக அதிகரிக்கவும், பல்கலைக்கழகங்களில் 47 பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவும், தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 15 பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனை கட்டமைப்புக்குள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அதிகாரிகளுக்கு ஆலேசனை வழங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments