நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் நிலவுகிறது. குறிப்பாக மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் தென்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்று வீசுவதன் காரணமாக மக்கள் பாதிப்புக்களை குறைத்திட போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments