கொரோனாவின் பிடிக்குள் நுவரெலியா மாவட்டமும் இலக்காகியுள்ளது. அந்த மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மொத்தமாக 15 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டங்களில் தலா 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
15 மாவட்டங்களிலும் நேற்றிரவு 10.30 மணிவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை வருமாறு:-
கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் தலா 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 29 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேரும், கண்டி மாவட்டத்தில் 07 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், குருநாகல், கேகாலை, மாத்தறை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், காலி, மட்டக்களப்பு, பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து 37 பேரும், இலங்கை வந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 03 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: