Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஈஸ்ரர் தாக்குதலையடுத்து மற்றுமோர் தாக்குதலுக்கு திட்டம்! ஒருவருடம் கழித்து வெளியிடப்பட்ட பரபரப்பு தகவல்

ஸ்ரீலங்காவில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்குப் பின்னரும் மற்றுமொரு தாக்குதலும் நடக்கவிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சிலரிடம் இருந்து இந்த தகவல் வெளிவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தெற்காசிய நாடொன்றில் தாக்குதல் நடத்திவிட்டு வரும் பயங்கரவாதிகளை ஸ்ரீலங்காவில் வைத்து பாதுகாக்கவும் சஹ்ரான் குழு முயற்சித்ததாகவும், அதற்காக புலனாய்வுப் பிரிவினரை குழப்பமடையச் செய்வதற்காக சஹ்ரான் குழு இரண்டாக பிரிந்தது போல காட்டப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.a

Post a Comment

0 Comments