Home » » யாழில் ஊரடங்கு தளர்த்தப்படுவது மிகவும் ஆபத்தானது: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் ஊரடங்கு தளர்த்தப்படுவது மிகவும் ஆபத்தானது: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவது மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனாவை விட கொடியது இனவாதம். தற்போது முஸ்லிம்கள் மீதான இனவாதம் வலுப்பெற்றுள்ளது அதன் ஒரு வெளிப்பாடுதான் தற்போதைய சூழலில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது தம்பி மீதான விசாரணையாகும்.
இன்று கருத்துச் சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்கள். குறிப்பாக நிவாரணப் பணிகளில் ஏற்படும் முறைகேடுகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் அரசாங்கத்தால் திடீரென பல மாவட்டங்களில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவது மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் இது முழுக்க முழுக்க தேர்தலை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் செய்யும் வேலை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பை தாமாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் புதிய சுகாதார பாதுகாப்பு முறைகளை தாம் தொடர்ந்தும் கடைப்பிடித்து அரசை நம்பாமல் தங்களைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |