Home » » கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கி வருகிறது

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கி வருகிறது


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 9 லட்சத்து 38 ஆயிரத்து 348 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக வேர்ல்ட் மீற்றர் இன்ஃபோ இணையத்தளம் தெரிவித்துள்ளது. அத்துடன் 47 ஆயிரத்து 286 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தொற்றியவர்களில் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 371 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு 5 ஆயிரத்து 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 574 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு 13 ஆயிரத்து 155 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெய்னில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் 9 ஆயிரத்து 387 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் 81 ஆயிரத்து 589 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் அங்கு 3 ஆயிரத்து 318 பேர் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனியில் 77 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் 931 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் 56 ஆயிரத்து 989 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் 4 ஆயிரத்து 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் 47 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் அங்கு 3 ஆயிரத்து 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் 29 ஆயிரத்து 474 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் அங்கு 2 ஆயிரத்து 352 பேர் உயிரிழந்துள்ளனர். சுவிஸர்லாந்தில் 17 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் அங்கு 488 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் 15 ஆயிரத்து 679 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் 277 பேர் உயிரிழந்துள்ளனர்.பெல்ஜியத்தில் 13 ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் 828 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெதர்லாந்தில் 13 ஆயிரத்து 614 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் அங்கு ஆயிரத்து 173 பேர் உயிரிழந்துள்ளனர். ஒஸ்ரியாவில் 10 ஆயிரத்து 824 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் அங்கு 146 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் கொரியாவில் 9 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் அங்கு 169 பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவில் 9 ஆயிரத்து 731 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் அங்கு 129 பேர் உயிரிழந்துள்ளனர்.
போத்துக்கலில் 8 ஆயிரத்து 251 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் அங்கு 187 பேர் இறந்துள்ளனர். அதேவேளை கொரோனா காரணமாக பிரேசில் நாட்டில் 244 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சுவிடனில் 239 பேர் உயிரிழந்துள்ளனர். நோர்வேயில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். அயர்லாந்தில் 85 பேரும் டென்மார்கில் 104 பேரும் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன் போலாந்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
ருமேனியாவில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்தியாவில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.லக்சம்பேர்கில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸில் 96 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் 16 பேரும் இந்தோனேசியாவில் 157 பேரும் உயிரிழந்துள்ளனர். பின்லாந்தில் 17 பேரும், கிறீஸில் 51 பேரும் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தமாக கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 47 ஆயிரத்து 286 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |