Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு காட்டுப்பகுதியை முற்றுகையிட்ட அதிரடிப்படை!

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி சந்தணமடு காட்டுப் பகுதி முற்றுகையிடப்பட்டு கஞ்சா தோட்டம் மற்றும் கசிப்பு கொள்கலன் என்பவற்றை வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர் இன்று கைப்பற்றினர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து எட்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் கஞ்சா தோட்டம் மற்றும் கசிப்பு கொள்கலன் என்பன வெவ்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்டன.
இதில் சந்தணமடு காட்டுப் பகுதியில் இருந்து பதினாறு கஞ்சா செடிகள் வளர்த்து வந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கசிப்பு தயாரிப்பதற்கு ஆரம்ப நடவடிக்கை மேற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்ட கசிப்பு 210 லீற்றர் கொள்கலன் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபர்கள் தப்பி ஓடியுள்ளதுடன், இவர்கள் தொடர்பான விசாரணைகளை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments