Home » » அடுத்துவரும் 10 நாட்கள் அதியுச்சத்தை தொடுவதற்கான அபாயகரமான நாட்கள்! பிரித்தானிய அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

அடுத்துவரும் 10 நாட்கள் அதியுச்சத்தை தொடுவதற்கான அபாயகரமான நாட்கள்! பிரித்தானிய அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

உயிர்கொல்வி வைரஸ் கொரோனா தொற்றினால் பிரித்தானியாவில் 7ஆயிரம் பேர் தொடக்கம் 20 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அடுத்த 7 தொடக்கம் 10 நாட்களுக்குள் அதியுச்சத்தை தொடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தொற்று நோயியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் அறிவித்துள்ள வழிமுறைகளை மக்கள் பின்பற்றாமை குறித்து பிரித்தானிய சுகாதார அமைச்சர் மெட் ஹான்ட்குக் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சிறிய எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறிவருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது வெப்பமான வானிலை காணப்படும் நிலையில், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் மக்கள் ஒன்று கூடுவதாக அதிகாரிகள் கூறியிருந்த நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தேசிய சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் 8 வீதமான பணியாளர்கள் பணியில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் வைத்தியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனிடையே தற்போது பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம், கொரோனா தொற்று பரவுவதை குறைக்கும் என தொற்று நோயியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள வழிக்காட்டல் அறிவுறுத்தல்கள் செயற்றிறனுடன் முன்னெடுக்கப்படும் பட்சத்திலேயே கொரோனா தொற்றில் வீழ்ச்சியை காணலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை 4300 ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 42 ஆயிரத்து 500 பேர் வரை கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனிடையே கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை அண்மித்துள்ளதுடன், தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 12 இலட்சத்தை தாண்டியுள்ளது.
இத்தாலியில் 15 ஆயிரத்து 362 பேரும் ஸ்பெய்னில் 11 ஆயிரத்து 947 பேரும் பிரான்ஸ்சில் 7560 பேரும் ஈரானில் 3452 பேரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளனர்.
நியூயோர்க்கில் நாளொன்றில் 630 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8500 ஐ அண்மித்துள்ளது.
இந்தநிலையில் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்படக் கூடிய கடினமான வாரத்தை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |