Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரு தொலைக்காட்சி அலைவரிசைகள்


பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்க சவாலை பெற்றிக்கொள்ள முன்னெடுக்கும் திட்டங்களை பலவீனப்படுத்த வேண்டாம். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தி பலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அரச தலைவர் தூர நோக்க கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு சுகாதார துறையினரது ஆலோசனைகளுக்கு அமையவே தீர்மானங்களை முன்னெடுக்கின்றார்.அரசாங்கம் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரது பொறுப்பாகும்.

அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து புத்திசாலித்தனமாக தற்போதைய நெருக்கடியை வெற்றிக் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பூகோள மட்டத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும். இந்த சவாலையும் வெற்றிக் கொள்ள வேண்டும்.

தேசிய உற்பத்திகளை வலுப்படுத்த அரசாங்கம் பல திட்டங்களை வகுத்துள்ளது.இதற்கமைய ஏப்ரல் 9ஆம் திகதி தேசிய மட்டத்தில் நாடுத்தழுவிய ரீதியாக வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையில் அனைவரும் ஈடுப்பட பயிர்ச்செய்கைக்கான கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றார்.
கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரு தொலைக்காட்சி அலைவரிசைகள்

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith

Post a Comment

0 Comments