Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் தொற்று! நிறுத்தப்படுகின்றது தேசிய வெசாக் தின நிகழ்வுகள்


கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்த ஆண்டிற்கான தேசிய வெசாக் தின நிகழ்வுகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்த சாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள் வீடுகளில் அமிசா மற்றும் பிரதிபட்டி பூஜைகள் இரண்டிலும் ஈடுபட வேண்டும் என்று அவர் வலிறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டிற்கான தேசிய வெசக் தின நிகழ்வுகள் களுத்துறை - ஒலபொடுவ ராஜ மகா விகாரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையினை கருத்திற்கொண்டு அதனை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு அரசாங்கம் அதன் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகின்றது. இவ்வாறான நிலையில், இது போன்ற நிகழ்வுகளை நடத்த முடியாது.
கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் ஆபத்து காரணமாக, அயல் வீட்டாரையோ அல்லது வெளி நாட்டினரையோ தங்கள் வீடுகளில் நடத்தப்படும் மத நிகழ்வுகளுக்கு அழைக்க வேண்டாம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments